இந்தியா
அமெரிக்காவை விட்டு வெளியேறினால் 3000 டாலர்

ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதிலிருந்து குடியேற்ற விதிமுறைகளில் நிறைய திருத்தங்கள் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன் புதிய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்க அரசிற்கு பயந்து சிலர் தாமாகவே வெளியேறினர். சிலர் காவல்துறை மற்றும் ராணுவத்தால் கண்டறியப்பட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்கதையாகி வரும் இவற்றுக்கு இடையில் அரசின் புதிய அறிவிப்பு பலரை விழிகளைத் தூக்கி பார்க்க வைத்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடித்து வெளியேற்றுவதில் அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இத்தகைய சட்ட விரோத குடியேறிகள் தாங்களாகவே முன்வந்து வெளியேற விரும்பினால் அவர்களுக்கு ஆயிரம் டாலர் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இப்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட காலம் என்பதால் அந்த தொகையை மூன்று மடங்காக உயர்த்தி அறிவித்துள்ளார்.
இந்தஆண்டு இறுதிக்குள் தாங்களாகவே வெளியேற முன்வந்தால் அவர்களின் பயணச் செலவுடன் கைச்செலவுக்கு ரூ.3 ஆயிரம் டாலர் (ரூ.2.70 லட்சம்) தரப்படும் என்று அமெரிக்க தாயக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டுபிடிக்கும் செலவு மற்றும் அவர்களது நாட்டுக்கு அனுப்பி வைக்கும் விமான செலவு ஆகியவற்றை தவிர்ப்பதற்காகவே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை 19 லட்சம் பேர் சொந்த விருப்பத்தின் பேரில் வெளியேறிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..













